×

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத துணை முதல்வரை கண்டித்து ரேஷன் பொருட்களை வாங்க மறுத்து மலைக்கிராம மக்கள் போராட்டம்

*பெரியகுளத்தில் பரபரப்புபெரியகுளம் :  தேனி மாவட்டம், போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, குறவன்குழி, கருங்கல் பாறை, அலங்காரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களுக்கு போக்குவரத்து சாலை வசதி கிடையாது. சாலை அமைத்து தருவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ஆனால், நடவடிக்கை இல்லை. இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு 12 கிலோ மீட்டர் நடந்து வந்த மலைக்கிராம மக்கள், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத துணை முதல்வரை கண்டித்து அவர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட ரேஷன் பொருட்களை வாங்க மறுத்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போடி வட்டார வளர்சி அலுவலர் ஆண்டாள் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது, ‘3 மாதங்களுக்கு முன்பு ரேஷன் பொருட்களை குதிரை மூலம் மலைக்கிராம மக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என கலெக்டர், துணை முதல்வர் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. மேலும், மலைக்கிராமங்களுக்கு சாலை அமைப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்தார். அதையும் நிறைவேற்றவில்லை என கூறி ரேஷன் பொருட்களை வாங்க மறுத்தனர். இது குறித்து கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போடி வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்தார். இருப்பினும் மலைக்கிராம மக்கள் ரேசன் பொருட்களை வாங்க மறுத்து திரும்பி சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. …

The post தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத துணை முதல்வரை கண்டித்து ரேஷன் பொருட்களை வாங்க மறுத்து மலைக்கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Malaikirama ,Periyakulam ,Theni District ,Bodi Assembly ,Ahamalai ,Puradi ,Uththukadam ,Deputy ,
× RELATED பெரியகுளத்தில் இளம்பெண்ணை கூட்டு...